முகமது யூனுஸ்

Publication :
LKR1,089.00

1 in stock

Author: மருதன் / Marudhan (Author)

ஒரு வங்கி பெரிதாக என்ன செய்துவிடும்? மிஞ்சிப்போனல் கடன் கொடுக்குமா?

ஆம். கடன் கொடுக்கும்தான். ஆனால் உலகில் எந்த நாட்டில் வங்கிகள் ஏழைகளைத் தேடித்தேடிப்போய் கடன் கொடுக்கிறது? அதுவும் வட்டிச் சுமையால் கழுத்தை நெதிக்காமல்?

கிராமீனுக்கும் பிற தேசிய வங்கிகளுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசமே இதுதான். கிராமீன் கைகொடுத்தால், பங்களாதேஷில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் ஏழைமையின் பிடியிலிருந்து மீண்டிருக்கிறார்கள். இக்காலத்தில் மட்டுமல்ல; எக்காலத்திலும் இப்படி ஓர் அதிசயம் நிகழ்ந்ததில்லை.

ஓர் அரசாங்கத்தால்கூட சாதிக்க முடியாத பல சாதனைகளை அநாயசமாகச் செய்து முடித்திருக்கிறார் முகமது யூனுஸ். கடன் கொடுப்பதோடு இவரது வங்கியின் பணி முடிவடைவதில்லை. கல்வி, சுகாதாரம், தொழில்நுட்பம் என்னு பரந்துபட்ட தளத்தில் வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. ஆனால் ஒன்று . ஏழைகளுக்குத்தான் உதவி. ஏழைகளுக்கு மட்டுமே. பங்களாதேஷிலிருந்து அமெரிக்க வரை கிளை பரப்பியிருக்கிறது யூனுஸின் வங்கி. யூனுஸ் கடன் கொடுக்கப் போனபோதுதான், அமெரிக்காவில் எத்தனை லட்சம் ஏழைகள் இருக்கிறார்கள் என்கிற விவரமே உலக்குத் தெரியவந்தது!

1 in stock