மக்கள் மத்தியில் மனநோய்கள், மனக்கோளாறுகள் குறித்துப் பல குழப்பங்களும் தவறான புரிதல்களும் உள்ளன. மனநலம் பற்றிய தமிழ் நூல்கள் மிகக் குறைவாகவே உள்ளன. மக்களிடையே பரவலாகக் காணப்படும் மனக்கோளாறுகள் பற்றி & மனச்சோர்வு முதல் மதுப் பழக்கம்வரை, அல்சைமர் மறதிநோய் முதல் உளவியல் ரீதியான பாலியல் கோளாறுகள்வரை & இந்நூல் விளக்குகிறது. வாசகர், மருத்துவர்கள், ஆரம்ப சுகாதாரப் பணியாளர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் எளிய தமிழில் எழுதப்பட்ட இந்நூல் மனக் கோளாறுகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் வினாப் பட்டியல்களையும் தன்னுதவிக் குறிப்புகளையும் கொண்டிருப்பது தனிச்சிறப்பு. ஒவ்வொரு இயலிலும் ஆராய்ச்சிச் சான்றுகள் மேற்கோள் காட்டப் பட்டுள்ளன. இந்நூல் வழங்கும் தகவல்கள் வாசகர் மனதில் மனநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
மனநோய்களும் மனக்கோளாறுகளும் | Mental Illnesses nd disorders
Publication :
LKR2,795.00
3 in stock
3 in stock