விடம் நிரம்பிய சைனைட் குப்பிகளைக் கழுத்தில் அணிந்த வீரர்களைச் சுமந்த காடு உடலைச் சிலிர்த்தது. சூரியன் நுழைந்து நீந்தும் ஓடையின் அருகில் இருந்த நெடுத்த மரத்திலிருந்து சோலைபாடியொன்று குரல்களை மாற்றி மாற்றிப் பாடிக்கொண்டே இருந்தது. நஞ்சு நெருங்காத நீல நெஞ்சக் குழியில் ஒரு சொல் சுழல்கிறது. வளவனின் நெருப்பு விழிகளில் சுடர்ந்தது தீராத்தாகம்.
– நாவலிருந்து…