ஈழ இனவழிப்பின் பின் சேரன் எழுதிய கவிதைத் தொகை வரிசையில் ‘காடாற்று’ (2011), ‘அஞர்’ (2018), ‘திணைமயக்கம் அல்லது நெஞ்சொடு கிளர்தல்’ (2019) என்பன வெளியாகின. இப்பொழுது ‘காஞ்சி’.
அதிர்ச்சியூட்டக்கூடிய படிமங்களின் அடித்தளத்திலிருந்து எழுகின்றன சேரனின் கவிதைகள். அனேகமாக, எல்லாக் கவிதைகளுக்குள்ளும் நம்மை உறைவில் ஆழ்த்திவிடக்கூடிய வரிகள் திடீரென்று எதிர்ப்பட்டு நம்மை நகரவிடாமல் செய்கின்றன.