இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்னை சார்ந்து தமிழில் எழுதப்பட்டவற்றுள் முதன்மையான ஆவணமாகக் கருதப்படுவது, பா. ராகவனின் ‘நிலமெல்லாம் ரத்தம்’. பாலஸ்தீன் பிரச்னையின் அனைத்துப் பரிமாணங்களையும் சார்பற்று ஆராயும் அந்த வரலாற்றுப் பிரதியின் இரண்டாம் பாகம் இது.
நிலமெல்லாம் ரத்தம், கிபி இரண்டாயிரமாவது ஆண்டின் தொடக்க காலச் சம்பவங்களுடன் நிறைவு பெறும். இந்நூல், இரண்டாயிரமாவது ஆண்டு தொடங்கி 2023 ஆம் ஆண்டில் ஹமாஸ்-இஸ்ரேல் போர் தொடங்கும் காலம் வரையிலான சரித்திரத்தின் அரசியல் பின்புலத்தை அலசுகிறது.
யாசிர் அர்ஃபாத், ஷேக் அகமது யாசின் என்கிற இரு பெரும் பாலஸ்தீனியத் தலைவர்களும் காலமானபின்பு அம்மண்ணின் விடுதலைப் போராட்டமும் அரசியலும் வேறு வண்ணம் கொண்டதன் ஆதாரச் சிக்கல்களைப் பட்டியலிட்டு, இது இன்னமும் தீர்வை நோக்கி முன்னகர முடியாமல் இருப்பதன் காரணங்களை அக்குவேறு ஆணி வேறாக அலசி ஆராய்கிறார் பாரா.