அகரனுடைய எழுத்தின் சிறப்புகளாக சிலவற்றைச் சொல்லலாம்:
தனித்துவமான சொற்கள்; நூதனமான உவமைகள்; விசித்திரமான, கறுப்பு நகைச்சுவை. ஆரம்ப எழுத்தாளர் என்ற தடயமேயற்ற முதிர்ந்த நடை.
போர்ச்சூழல் கதைகள், உளவியல் ஆழம் கொண்டவை, அறிவியல் புனைவு என பல்வேறு வகைமைகள்.
வேளையின் புதிர்களைப் பேசும் கையறுநிலைக் கதைகள். வெளிப்படையாக அரசியலை முன்னிறுத்தாதவை. சொந்த மண்ணில் நிகழ்பவையும் சரி, அந்நிய தேசத்தில் நடப்பவையும் சரி, தீனர்களின் வாதையைப் பேசுகிறவை.
சித்திரங்களின் நுட்பம்வழி நகரும் கதைகள் சில. உணர்ச்சிகளைக் கிளர்த்தி நகர்கிறவை சில. அபுனைவின் சாயல் கொண்டவை ஓரிரண்டு.
சில கதைகள், வாசிக்கும் மனத்தில் பதற்றமூட்டுபவை; அதனாலேயே நிறைவையும் அளிப்பவை. கலையில் பெருகும் துயரம்தான் வாசக மனத்துக்கு எத்தகைய ஆசுவாசத்தை, இன்பத்தை அளிக்கிறது…!
புலம்பெயர் இலக்கியத்தின் தவிர்க்கமுடியாத பெயர்களில் ஒன்றாக கேசநந்தன் அகரன் உருவெடுக்கும் காலத்தை முன்னுணர்த்தும் தொகுப்பு இது…
– யுவன் சந்திரசேகர்

LKR1,056.00
5 in stock