அது இனிமையான ஓர் இரவு: அருமை வாசகரே, இளம் வயதில் மட்டுமே நாம் அறியக் கூடிய ஓர் இரவு. வானத்தில் அப்படி விண்மீன்கள் நிறைந்திருந்தன, அவ்வளவு நிர்மலமாக ஒளிர்ந்தது வானம். அதைப் பார்க்கையில் இப்படிப்பட்ட ஒரு வானத்தின் கீழ் பல வகையான முசுடுகளும் மூர்க்கர்களும் எப்படி வாழ முடிகிறது என்கிற கேள்வி நிச்சயம் உங்கள் மனதில் எழவே செய்யும். இந்தக் கேள்வியும்கூட இளம் வயதுக்குரியதுதான்; அருமை வாசகரே, மிகமிக இளம் வயதுக்குரியது. ஆனால், இது போன்ற கேள்விகள் அடிக்கடி உங்கள் மனதில் எழுந்து உறுத்தும்படி ஆண்டவன் அருள் புரிவாராக! பல வகையான முசுடுகளையும் மூர்க்கர்களையும் பற்றிப் பேசப் புகும் நான் அன்று பகல் முழுவதும் என் நடத்தை போற்றத் தக்கவாறு சிறப்பாக இருந்ததை நினைவு கூராமல் இருப்பதற்கில்லை காலையிலிருந்தே லிபரீதமான ஒருவகை ஏக்கத்தால் பீடிக்கப்பட்டிருந்தேன் எல்லாரும் என்னைக் கை விட்டுச் செல்வதாக, எல்லாரும் என்னைத் துறந்து விட்டுப் போவதாகத் திடும்மென எனக்குத் தோன்றியது.யார் இந்த எல்லாரும் என்கிற கேள்வி நியாயமாகவே எழுகிறது. ஏனெனில் எட்டு ஆண்டுகளாக நான் பீட்டர்ஸ்பர்கில் வசித்து வருகிறேன், அப்படியும் இங்கு எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை, ஒருவரோடு கூட என்னால் நண்பனாக முடியவில்லை
LKR650.00
3 in stock