வயது வந்த ஓர் ஆணும் பெண்ணும் வாழ்க்கையில் பிரவேசிப்பதற்காகத் தங்களுக்குள் செய்து கொள்ளும் ஒப்பந்த வினையைத்தான் இன்று நாம் திருமணம் என்கிறோம். அந்த வினைகள் பலவிதமாகச் செய்யப்பட்டு வருகின்றன. அத்தனை விதங்களுக்கும் ஆதாரமோ அவசியமோ என்ன என்பதற்கு யாராலும் காரணம் சொல்ல முடியாவிட்டாலும், ஏதோ பழக்க வழக்கம் என்று சொல்லிக் கொண்டு தங்கள் கவுரவங்களையும் நினைத்துக் கொண்டு என்னமோ செய்து வருகிறார்கள். உலகில் மக்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு துறையிலும் மாற்றம் ஏற்பட்டு வருவதுபோல் இத்திருமணம் என்கின்ற முறையிலும் காலதேச வர்த்தமானத்தை உத்தேசித்துப் பல மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. மற்றும் பல துறைகளிலும் அனாதியான பழக்க வழக்கம் என்பவைகளில்கூட அறிவு விசாலத்தை முன்னிட்டும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
4 in stock