மரணத்திற்கு மிக அருகில் சென்று மீண்டெழுந்தவர்களின் கதைகள், நம் வாழ்விற்கு வெளிச்சமூட்டுபவை. எதிலிருந்தும் திரும்பிவரலாம் என நம்பிக்கை அளிப்பவை. மனுஷ்ய புத்திரனின் ‘வாதையின் கதை’ சிகிச்சைகால அனுபவங்களை கவித்துவ நோக்கில் விவரிக்கும் தொகுப்பு. சிகிச்சையின் இருண்ட அச்சமூட்டும் பாதைகளில் நடக்கும் எவருக்கும் எக்காலத்திலும் இந்தக் கதை தங்களுடைய கதையாக இருக்கும். அவர்களுக்கு நடந்ததற்கு ஒரு சாட்சியமாக இருக்கும். இது வாதையின் கதையல்ல. உண்மையில் மீட்சியின் கதை. திரும்பிவருதலின் கதை.
LKR858.00
4 in stock