வாழ்க்கைக் குறிப்புகளில் எத்தனையோ வகையான வாழ்க்கைக் குறிப்புகள் உண்டு; அரசியல்வாதி, சீர்திருத்தவாதி, கலைஞன், கவிஞன், கல்விமான், எழுத்தாளன், ஆராய்ச்சிக்காரன், விஞ்ஞானி இத்தகையோரின் வாழ்க்கைக் குறிப்புகள் மேலைநாட்டு மொழிகளில் எல்லாம் ஏராளமாக நூல் வடிவில் வெளிவந்து இருக்கின்றன.
நமது அருமைத் தமிழ் மொழியில் வாழ்க்கைக் குறிப்பு இலக்கியங்கள் மிக மிகக் குறைவாகத்தான் இருக்கின்றன. டாக்டர் உ.வே. சுவாமிநாத அய்யர் அவர்கள், திரு.வி. கலியாணசுந்தர முதலியார் அவர்கள், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அவர்கள் ஆகியோர் தங்கள் வாழ்க்கைக் குறிப்புகளைச் சுயசரிதங்களாக எழுதியிருக்கிறார்கள். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள், தியாகராஜ செட்டியார் அவர்கள் ஆகியோரின் வாழ்க்கை குறிப்புகளை டாக்டர் அய்யர் அவர்கள் எழுதி இருக்கிறார்கள்.
LKR2,275.00
2 in stock