லிபரல் பாளையத்து கதைகள் /Liberal Paalayathu Kathaigal

Publication :
LKR1,300.00

3 in stock

Author: Aadhavan Dheetchanya

சமூக அமைப்பின் மீதும் அதை வழிநடத்தும் அதிகாரத்துவத்தின் மீதும் யாதொரு புகாருமற்று, எல்லா ஒழுங்கீனங்களுக்கும் குற்றங்களுக்கும் பாகுபாடுகளுக்கும் வன்முறைகளுக்கும் தனிமனிதர்களைப் பொறுப்பாக்கி நெக்குருக எழுதுவதும் அதைக் கண்ணீர் மல்கக் கதைப்பதும் இங்கொரு வணிகமாகப் போய்விட்டது. முப்பதாண்டுகால உலகமயமாக்கமும் எட்டாண்டுகால இந்துத்துவாக்கமும் சமூக அமைப்பிலும் வாழ்முறையிலும் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்கள், ஆளுமைச் சிதைவுகள், அறவீழ்ச்சிகள், நுகர்வியம், வாழ்க்கைத் தரத்தில் அரிமானம், சூழலழிப்பு என்று நம்முடைய சமகாலத்தைத் துள்ளத்துடிக்க எழுதுவதே எனது தேர்வாக இருக்கிறது. அப்படியல்லாத ஊளைக்கதைகளை எழுதிக் குவிப்போர் பட்டியலில் எனது பெயர் இல்லாதது சற்றே கர்வத்தைத் தருகிறது.

3 in stock