மோதிப்பார் – ஹியூகோ சாவேஸ்

Publication :
LKR858.00

4 in stock

Author: மருதன் / Marudhan (Author)

புரட்சி என்கிற சொல்லை இருபத்தோராம் நூற்றாண்டுக்கு புதிய கோணத்தில் மறு அறிமுகம் செய்து வைத்தவர் வெனிசூலா அதிபர் ஹியூகோசாவேல்.
ஒரு குண்டு கூட வெடிக்காமல், ராணுவக் கலகம், ஆட்சிக் கவிழ்ப்பு, கொரில்லா தாக்குதல் எதுவும் இல்லாமல், முறைப்படி தேர்தலில் நின்று மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று ஜெயித்தவர் சாவேஸ். ஆனாலும் காஸ்ட்ரோவுக்குப் பிறகு, லத்தீன் அமெரிக்காவின் மாபெரும் புரட்சியாளராகவே பார்க்கப்படுகிறார்.
அமெரிக்காவையும் புஷ்ஷையும் மிகத் தீவிரமாகவும் பகிரங்கமாகவும் எதிர்க்கும் சாவேஸுக்கு, வெனிசூலா மட்டுமின்றி ஒட்டுமொத்த தென் அமெரிக்காவும் பக்க பலமாக இருக்கிறது.
வெனிசூலாவில் சாவேஸ் நிகழ்த்திக் காட்டிய அமைதிப் புரட்சி, ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்கச் செய்தது. மிகவும் பின்தங்கிய, பொருளாதார பலம் இல்லாத தேசமாக இருந்த வெனிசூலாவை, சாவேஸ் தமது திறமை மிகுந்த ஆட்சியாலும் அச்சமற்ற நடவடிக்கைகளாலும், வளரும் நாடுகளில் ஒன்றாக்கி இருக்கிறார்.
வெனிசூலா என்னும் தேசத்தின், ரத்தமும் நகமும் சதையும் உயிரும் ஆன்மாவுமாக இருப்பவர் சாவேஸ். அமெரிக்காவை எதிர்த்தாக வேண்டும். அமெரிக்கா தன் உளவுத்துறை மூலம் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கும் உள்நாட்டுக் கலகங்களைச் சமாளித்தாக வேண்டும். இதற்கிடையில், தேசத்தை அடுத்த கட்டத்துக்கும் நகர்த்திச் செல்ல வேண்டும். ஒரு வகையில் பார்த்தால், சாவேஸுக்கு நித்தம் நித்தம் யுத்தம்தான். தினம் தினம் புரட்சிதான்.
சாவேஸின் அசாதாரணமான வாழ்க்கையையும் வெனிசூலாவின் சமகாலச் சரித்திரத்தையும் ஒருங்கே சொல்கிறது இந்நூல்.

4 in stock