• ‘கற்பனைக்கும் எட்டாத கற்பனை’ எனக் கருதப்பட்ட ‘இஸ்ரேலிய உருவாக்கம்’ நிகழ்ந்தது எப்படி?
• அடுத்தடுத்த கட்டங்களில் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்த காரணிகள் யாவை?
• அவற்றை இஸ்ரேல் எவ்வாறு எதிர்கொண்டது?
• தனது பாதுகாப்பை முன்னிட்டு இஸ்ரேல் மேற்கொண்ட பதிலடி நடவடிக்கைகள் அதன் எதிரிகளிடமும், அன்றைய வல்லரசு நாடுகளிடமும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தின?
• தொடக்கம் முதல் இன்றுவரை இஸ்ரேலின் செயல்பாடுகளைத் தீர்மானிப்பதில் மொஸாட்டின் பங்கு என்ன?
இத்தகைய கேள்விகள் குறித்து ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டு, அதன் வழியே திரட்டிய தகவல்களைப் புத்தகமாக்கியுள்ளார் ஆசிரியர் விதூஷ்.
இஸ்ரேல் பற்றியும் அதன் உளவு அமைப்பான மொஸாட் பற்றியும் விரிவாகத் தெரிந்துகொள்ள உதவும் நூல்.