வெற்றிக் கதை… வெற்றியின் கதை… ராணிப்பேட்டையிலிருந்து இயக்குனராகும் கனவுகளுடன் புறப்பட்ட ஒரு இளைஞன் பல வருட உழைப்புக்கும் தேடலுக்கும் பின் எப்படி தன் விசாரணை படத்துக்காக வெனிஸ் உலகத்திரைப்பட விழாவில் விருது வாங்கும் சிறந்த இயக்குனராக வெற்றி பெற்றான் என்ற கதையை தன் மொழியில் சுவாரஸ்யமாக இந்நூலில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். வெற்றியைத் தேடுபவர்களுக்கும் வெற்றியை நேசிப்பவர்களுக்கும் இந்த வெற்றி மாறன் கதை ஒரு எனர்ஜி டானிக். தன் அப்பா அம்மாவில் துவங்கி இயக்குனர் பாலு மகேந்திரா, நடிகர் தனுஷ் மற்றும் அவரது பாதையில் எதிர்கொண்ட நட்பு, காதல் என பல வகையில் கிளை பிரித்து திரைக்கதைக்கான சுவாரஸ்யத்துடன் எழுதி வார்த்தைகளாலும் வசப்படுத்தி விடுகிறார் இயக்குனர் வெற்றி மாறன்.