அறிவற்றவள், நுகர்வுப்பண்டம், தானாக எதையும் செய்யும் தகுதியற்றவள், சார்பு உயிரி எனப் பலவாறு ஒடுக்கிய ஆணியப் பொதுப்புத்திக்குள் புகுந்து அதன் மேட்டிமைத்தனங்களை உடைத்துச் சுக்குநூறாக்கி நடுத்தெருவில் எறிந்துவிடும் அறிவிலும் செயலிலும் ஆற்றல் மிக்க பெண்களைப் படைத்துக்காட்டும் மீராவின் எழுத்து, பழமைவாதக் கருத்தியல்களுக்குள் ஊறிக்கிடந்து அவற்றின் உடல்களாக ஆகிப்போனவர்களுக்குப் பேரதிர்ச்சியைத் தராமல் இருக்காது. எத்தனையோ பெண்களின் வாழ்க்கை கொடுந்துயரங்களால் சூழப்பட்டிருந்தாலும் அவர்கள் ஆணிய ஆதிக்கக் கருத்தியலுக்குள் ஒடுங்கிக்கிடந்து சீரணிக்க முடியாத துயரங்களைத் தங்களுக்குள் புதைத்துக்கொண்டு வாழ்தலைக் கடந்துபோகின்ற சூழலில், ஒரு பெண்ணின் வாழ்வனுபவத்தை ஆணியச் சமூகத்தின் முன் அப்பட்டமாகத் திறந்து வைத்து அதிர்ச்சியூட்டுகிறது ‘மீராசாது’ என்ற இந்தக் குறுநாவல்.
LKR975.00
3 in stock