காலைக் கதிரவனின் கதிர்கள் அந்த ஓவியனின் பெரிய ஓவியக்கூடத்தை ஒளி மயமாக்கிக்கொண்டிருந்தன. அந்த வீட்டுக் கூரையிலிருந்த ஒரு சிறு துவாரத்தின் மூலம் உள்ளே நுழைந்த கதிரொன் அவ் ஓவியக்கூடத்தின் உயரத்தை அளப்பதுபோல் தூய நீல நிறத்தில் பளபளத்தது. வானத்தில் பறந்து செல்லும் பறவைக் கூட்டத்தின் நிழல்கூட அவ்வொளிப் பிம்பத்தில் ; தெரிந்தது. ஆனால் அந்த வீட்டின் உயர்ந்த கூரையும், திரைச்சீலைகளும் கதிரொளியை உள்ளே விடாமல் தடுத்துவிட்டன. இருண்டிருந்த அப் பிரம்மாண்டமான ஓவியக்கூடத்திலிருந்த ஓவியங்களின் தங்க நிறச் சட்டங்கள் அந்த மங்கிய ஒளியிலும் மின்னிக்கொண்டிருந்தன. உழைத்து அலுத்த கலைஞனின் இல்லத்திற்கேற்ப சாந்தியும் உறக்கமும் அங்கே சிறைப்பட்டிருந்தன. சிந்தனை குடி இருக்கும் அந்தக் கூடத்திற்குள் எல்லாமே அமைதியாக இருந்தன. அரைகுறையான சித்திரங்கள், திரைச்சீலைகள், மேசை நாற்காலிகள் அனைத்துமே சிந்தனைப் போராட்டத்தின் விளவாகக் களைப்புற்று ஓய்வெடுத்துக்கொள்வதைப் போலிருந்தது. அந்த அறையெங்கும் வர்ணம், கற்பூரத் தைலம், புகையிலை இவைகளின் கலவையான ஒரு விநோதமான மணம் நிறைந்திருந்தது. பாரிஸ் நகரத்து வீதி அரவம் தவிர அவ் வீட்டினுள் ஒருவித சப்தமும் எழவில்லை. எவ்விதச் சலனமுமில்லாத அவ்வறையில் சோபாவில் சாய்ந்த வண்ணம் ஆலிவர் சிகரெட்டைப் புகைத்துக்கொண்டிருந்தான். அப்புகை மட்டுமே அவ்வறைக்குள் அசைந்துகொண்டிருந்தது. கற்பனையில் லயித்திருந்த பார்வை வானத்தை நோக்கி இருந்தது. சித்திரம் தீட்ட ஒரு புதுக் கற்பனையைத் தேடிக்கொண்டிருந்தான். எதைப் பற்றி வரைவது என்று அவன் இன்னும் தீர்மானிக்கவில்லை. தன்னைப் பற்றியே நிச்சயமில்லாத ஆலிவர் கறபனையின் உந்துதலிலேயே சித்திரம் தீட்டுபவன்.
மரணத்தை விட வலிமையானது? | Stronger Than Death?
Publication :
LKR1,650.00
3 in stock
LKR1,650.00
3 in stock