மனிதனா, இயந்திரமா: வெல்லப்போவது யார்? செயற்கை நுண்ணறிவு – ஓர் அறிமுகம் /Man or Machine: Who Will Win? Artificial Intelligence – An Introduction

Publication :
LKR845.00

3 in stock

Author: முனைவர் பெ சசிக்குமார்

செயற்கை நுண்ணறிவு இன்றைய சூழலில் ஆர்வத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்திவருகிறது. அது நன்மையா தீமையா என இன்று விவாதம் நடந்துகொண்டிருக்கிறது.

செயற்கை நுண்ணறிவு சார்ந்து உருவாகிவரும் தொழில்நுட்பம் நான்காவது தொழில்நுட்பப் புரட்சி எனக் கூறப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பப் புரட்சியில் எந்தெந்த வேலைகள் நிலைக்கும், எவை மங்கி மறைந்துபோகும் என்பது பெரிய கேள்வியாக எழுந்து நிற்கிறது.

செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன, இந்தத் துறையில் இன்று மேலோங்கியுள்ள நுட்பங்கள் என்னென்ன, இதன் சாதக பாதகங்கள் என்ன, இந்தத் துறையில் மேல் படிப்பு படிக்க என்ன செய்ய வேண்டும் எனப் பல அம்சங்களையும் குறித்த விரிவான அறிமுகம்தான் இந்நூல்.

அறிவியல் தொடர்பான நூல்களை படைத்துவரும் முனைவர் சசிக்குமார் எழுதியிருக்கும் இந்த அறிமுக நூல் செயற்கை நுண்ணறிவு குறித்த பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கிறது. இவர் இஸ்ரோவில் பணிபுரிகிறார்.

3 in stock