இசை. சங்ககால, நவீன இலக்கியங்கள், சமூகம், தத்துவம். மொழி எனப் பல விதமான பரப்புகளில் இந்நூலின் கட்டுரைகள் அமைந்திருக்கின்றன. விரிவான, நுட்பமான இந்த ஆய்வுகள் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் வரலாற்றுத் தகவல்களுக்கு மாற்றான எதிர் வரலாற்றைக் கட்டமைப்பதிலும் வரலாற்றை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்துகின்றன.
விலக்கப்பட்ட வரலாற்றுத் தகவல்களையும் ஆதாரங்களையும் விரிந்த, பரந்த அளவில் அணுகி ஆய்ந்து அவற்றுக்கு முழுமையை அளிக்கும் பார்வையைக் கொண்டவை இக்கட்டுரைகள்,
பொ. வேல்சாமியின் வரலாற்று ஆய்வுகளின் வீரியத்தையும் அவை நிகழ்த்தும் கட்டுடைப்புகளையும் இந்நூலில் காணலாம்.