நேற்றிரவு எல்லையற்ற மகிழ்ச்சியுடன் இருந்தேன். அவ்விதம் இருப்பது மிகவும் கடினம். உன் வாழ்க்கையிலேயே நான் கூறியவிதம் நேற்றுதான் நீ ஒன்றைச் செய்திருக்கிறாய்.
நான் கண் விழித்து எழுந்தபோது இரவு எட்டு மணியாகிவிட்டது. மெழுகுவர்த்தியை எடுத்து ஏற்றி, காகிதங்களை மேஜை மீது விரித்தேன். பேனாவை சுத்தம் செய்து கொண்டிருக்கும்போது மனம் துள்ளி விளையாடுவதை உணர்ந்தேன். இதன்மூலம் எனக்கு என்ன வேண்டும். என் மனம் எதை விரும்புகிறது என்பதை உணர்ந்திருப்பாய். நான் கூறியவிதம் ஜன்னல் திரையின் அடிபாகத்தின் நுனிகளை இழுத்துக் கட்டியிருந்தாய். அப்படியும் உன்னுடைய முகம் ஜன்னல் வழியே தெரிவதாகவும், என்னை நினைத்து எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தோன்றிற்று. உன்னுடைய முகத்தைத் தெளிவாகப் பார்க்காதது வருத்தத்தை உண்டு பண்ணுகிறது. உன் முகத்தை நன்றாகப் பார்த்த நேரங்களும் இருக்கின்றன. வயோதிகம் ஒரு வரப்பிரசாதமாகும். இரவு வேளையில் சிறிது எழுதுவதற்குள் கண்பார்வை மங்கலாகி விடுகிறது. வலியும் எடுத்துக் கண்ணீரும் பெருகத் தொடங்குகிறது. காலையில் யாராவது முகத்தைப் பார்த்தால் வெட்கப்படும்படியாகி விடுகிறது. ஆனால் உன்னுடைய புன்முறுவல் என் உள்ளத்தை உணர்ச்சிவசமாக்கித் தட்டி எழுப்புகிறது. நீ புன்முறுவல் செய்யும்போது சில சமயம் உனக்கு முத்தம் அளித்திருக்கிறேன், அது நினைவிருக்கிறதா? அச்சமயங்களில் நீ உன் சிறு விரல்களால் என் முகத்தைப் பற்றித் தள்ளியதாகவும் தோன்றுகிறது. எல்லாவற்றையும் அடுத்த கடிதத்தில் விவரமாக எழுது.
நம்முடைய திரையின் ரகசியத்தைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? அந்த ரகசியம் ஈடு இணையற்றது அல்லவா? வேலை செய்யும்போதோ, படுக்கையில் படுத்துத் தூங்கும் நேரத்திலோ, விழித்திருக்கும் சமயமோ நீ அந்த ஜன்னல் திரையை விட்டிருந்தால் அதற்குப் பின்னால் நின்று என்னை மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பாய் என்று நினைப்பேன். திரையை விலக்கியிருந்தாலோ “இரவு வந்தனம்” அல்லது ”காலை வந்தனம் “இரவு நன்றாகத் தூங்கியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.