பழி பகை பஞ்சம் பங்களாதேஷ்

Publication :
LKR1,848.00

5 in stock

Author: Kogila

பங்களாதேஷ் மக்களின் மத அடையாளம் மட்டுமே அவர்களைப் பாகிஸ்தானுடன் இணைத்து வைத்திருக்கப் போதுமானதாக இல்லை, வங்காள இனமாக இணைந்து போராடி விடுதலை பெற்ற பிறகும் சிக்கல் தீரவில்லை. அதிபர்கள் அடுத்தடுத்துப் படுகொலை செய்யப்பட்டனர். செல்வம் செழித்த மண்ணில் பசி, பஞ்சத்தால் மரணமடைந்தனர் மக்கள், ராணுவ ஆட்சிக்கும் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கும் வித்தியாசம் காண முடியாத நிலை. இதன் காரணங்களை ஆராய்ந்து, மக்களாட்சிக்கான பங்களாதேஷிகளின் போராட்டத்தை, அவர்களின் கோணத்தை முதன்மையாக வைத்துப் பதிவு செய்கிறது இந்நூல்,

நூலாசிரியர் கோகிலா, மெட்ராஸ் பேப்பர் இணைய இதழில் துணை ஆசிரியராகப் பணிபுரிகிறார். ஒரு மனிதன் ஒரு நகரம். உலரா உதிரம், தொழில்நுட்பம் அறிவோம், தடை அதை உதை உள்ளிட்ட இவருடைய நூல்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இவர் எழுதிய நூல்கள் அமேசான் கின்டிலிலும் உள்ளன.

5 in stock