அரசியல், சமூகம், சினிமா ஆகியவை பற்றிய உண்மைகளைக் கூசாமல் வெளிப்படுத்தும் இந்தப் பாகற்காயின் சுவை மிகுந்த கசப்புத்தான்.ஆனாலும் கெட்டுப்போன தமிழனுக்கு இந்த மருந்து அவசியமாயிருக்கிறது. இவர் கவிதைகளில் இன்சொல் பார்க் கிறோம், இரக்கம் தென்படுகிறது, குற்றம் கொஞ்சமும் இல்லை.எனவே, கவிஞர் நா. முத்துக்குமாரை ‘செம்பொருள் கண்டவர்’ என்றும், இவர் சொற்கள் ‘செம்மாந்த கவிதை கள்’ என்றும் வாசக சபைக்குத் தயக்க மின்றி வழிமொழிகிறேன்.