விடுதலை பெற்று சுனாமி சமயத்தில் உதவி செய்துவிட தெற்கு இலங்கை நோக்கிய பயணத்தில் தன்னை சிறையில் வைத்திருந்த புலிகளின் பிரதிநிதிகளை பார்க்கிறார். அவர்களும் சேர் எப்படி இருக்கிறீர்கள் என விசாரிக்கிறார்கள். ஒருவர் படகுபயணம் செய்து அவர் குழந்தையுடன் இவரை கண்டு செல்கிறார். இதில் தான் மானுட சாரம் வெளிப்படுகிறது.
சிறைக்காலத்தில் தன்னை புலிகளின் உளவாளி ஆக செயல்படுகிறார் என அரசு குற்றச்சாட்டு வைக்க விடுதலைக்கு பின்னான காலத்தில் அதை அவர் மறுத்து தன்னை நிரூபிக்கிறார். ஆனாலும், சந்தேக நிழல் இன்னமும் மீதி இருக்கிறது. விடுதலை பெற்றதன் பின்னான உலகம் அவருக்கு பெரிய தளர்வையும், வருத்தத்தையுமே தருகிறது. அதிலே தான் இப்புத்தகமும் பிறக்கிறது.
இதை படிக்கும் போது என் நினைவுக்கு ஷோபாசக்தியின் “கொரில்லா“நினைவுக்கு வராமலில்லை. இப்புத்தகத்திலும் ஒரு இடத்தில் இவ்வாறு வருகிறது. அது “புலிகள் சிங்கள இராணுவத்தினரை சிறைபிடித்து அவர்களை நடாத்திய தன்மைக்கும், எதிர் இயக்கத்தவர்/ஒற்றர்கள்/நம்பிக்கை துரோகிகள் என்று சிறைபிடித்து அவர்களை நடத்திய தன்மைக்கும் பாரிய வித்தியாசம் இருக்கிறது.