நீங்கள் நான்காவது கணவரா? (அறியப்படாத திருமண மந்திரங்கள்)

LKR350.00

3 in stock

Author: செ.தி. ஞானகுரு

அரிதின் முயன்று மூல நூல்களைத் தேடிப் பிடித்து, அவற்றைத் தெளிவாகக் கற்று முறையான ஒரு விவாதத்தை நூலாசிரியர் ஞானகுரு அவர்கள் முன்வைக்கிறார்.

இந்நூல் எழுப்பும் முக்கியமான வினா, பிராமணர்களுக்கு மட்டுமே என்று விதிக்கப்பட்ட வைதிகச் சடங்குகளைக் குறிப்பாக திருமணம், பிள்ளைப்பேறு சார்ந்த சடங்குகளை, மந்திரங்களைப் பிற வர்ணத்தாருக்கும் ஏன் பயன்படுத்த வேண்டும் என்பது. அதோடு அந்த மந்திரங்களும் சடங்குகளும் இவைதான் தெரிந்து கொள்ளுங்கள் என விரித்து விவரித்துக் கூறுவதன் மூலம், இன்றைய நவீன காலகட்டத்தில் அவற்றின் பொருத்தப்பாடின்மையையும் விளக்கும் முக்கிய பணியையும் இந்நூல் செய்கிறது.

மிக விரிவாகத் தெளிவாக இந்நூல் சாஸ்திர சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் விவரிப்பதைப் படிக்கும்போது உண்மையில் ஆச்சரியம் எழுகிறது.

இன்றைய காலகட்டத்தில் பிராமணர் அல்லாதாரின் திருமணச் சடங்குகளை மந்திரங்கள் ஓதி நடத்தி வைப்பது என்பதே கேலிக்குரியது என்கிறது இந்நூல், பிராமணர்களுமே கூட இவற்றை இன்று அலங்காரச் சடங்குகளாகவே செய்து மகிழ்கிறார்களே தவிர அர்த்தம் புரிந்து கடைபிடிக்கிறார்களா என்பதே கேள்விக்குரியது. அர்த்தம் புரிந்தால் அவற்றைக் கடைபிடிக்க இயலுமா என்பதும் நோக்கத்தக்கது

3 in stock