ஐந்து வயதிலேயே தாயை இழந்தவன் நான். இருபது வயது வரை கிராமத்தில் என்னை வளர்த்தவர் அப்பாவைப் பெற்ற பாட்டி கிருஷ்ணவேணி அம்மாள். இருபது வயதுக்குப் பிறகு மாநகரத்தில் என்னை வளர்த்துக்கொண்டிருப்பவர் அம்மாவைப் பெற்ற பாட்டி கிருஷ்ணவேணி அம்மாள். இருவர் பெயரும் கிருஷ்ணவேணி என்பது இயற்கையின் இனிய ஒற்றுமை. இவர்கள் இன்றி என் முகவரி சிதறிப் போயிருக்கும். நன்றி என்ற வார்த்தைக்குள் எப்படி இவர்களை அடைப்பது? சிறுவயதில் விளையாட்டில் ஏற்படும் காயங்களில் எல்லாச் சிறுவர்களும் அம்மா என்று குரலெடுத்து அழுவார்கள். அப்போதுகூட நான் ‘அப்பா’ என்றுதான் அழுதிருக்கிறேன். என் ஆளுமையில் பெரும்பங்கு வகிக்கும் தந்தை எ.நாகராசனுக்கும் என் அன்பு. காட்டுப்ரியத்துடன்… நா.முத்துக்குமார்
LKR3,630.00
3 in stock