ஏற்றத்தாழ்வுகளை போற்றும் வேதவியல் சனாதனக் கோட்பாடுகளை வாழ்வியல் தத்துவமாக போதிக்கும் இந்து மதமே. கல்விக்கும் சமூக ஏற்பாட்டிற்கும் எதிரான பண்புகளைக் கொண்டிருப்பதால் கல்வி என்ற உண்மையான பண்பு செவ்வனே செயல்பட அது தடையாக இருக்கிறது.
அடிப்படையில் நம் சமூகம் கல்விக்கெதிரான பண்புகளை கொண்டிருந்தது கிடையாது, என்று அது வைதீக கோட்பாடுகளின் அடிப்படையில் இந்துமதமாக உருவெடுத்ததோ அந்தக் கணமே, அது தன் உயரிய பண்புகளை இழந்துவிட்டது. ஆதலால். கல்வியை முழுமையாக செயல்பட வைக்க ‘நாம் இந்துவல்ல’ என்ற நிலைப்பாட்டிற்கு வரவேண்டியிருக்கிறது.