தோற்காதவள்

LKR1,452.00

5 in stock

Author: காயத்ரி ஒய்

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா தோற்றார்.  பொதுவாகத் தோல்வியுற்றவர்களின் சரித்திரத்துக்குப் பெரிய மரியாதை இருக்காது. ஆனால் கமலா விஷயத்தில் அது முற்றிலும் தலைகீழ். எந்தப் பின்புலமும் இல்லாமல் தனது சொந்த முயற்சியால் படிப்படியாக வளர்ந்து முன்னேறி, அமெரிக்காவின் துணை அதிபராக நாடே கொண்டாடும் அளவுக்கு உயர்ந்தவர், அதிபர் தேர்தலில் வெல்ல முடியாமல் போனது. அதன் காரணங்களை அமெரிக்கர்கள் ஆராயட்டும். நமக்கு முக்கியம், ஒரு தமிழ்ப் பெண் அடைந்த அந்த உயரம். அவர் பெண் என்பதும் கறுப்புத் தோல் கொண்டவர் என்பதும்தான் அவரது வெற்றியைத் தடுத்த காரணிகளே தவிர, திறமையற்றவர் என்பதல்ல. கமலாவின் வாழ்க்கை, சாதிக்கத் துடிக்கும் அத்தனைப் பெண்களுக்கும் மிகச் சரியான பாடம். அதிபர் தேர்தலில் கண்ட தோல்வியிலிருந்தும் அவர் கற்றுத்தந்து கொண்டேதான் இருக்கிறார் என்பதுதான் அவரது சிறப்பு. நூலாசிரியர் காயத்ரி ஒய், மெட்ராஸ் பேப்பரில் தொடர்ந்து எழுதுபவர். வங்கி ஊழியராகச் சென்னையில் பணியாற்றுகிறார்.

5 in stock