தேசியத்தின் உண்மைகளும் பொய்களும் | The truths and lies of nationality

Publication :
LKR3,243.50

3 in stock

கோவிட் பெருந்தொற்று பரவியிருந்த 2020-ஆம் ஆண்டு மழைக்காலத்தில் ஒர் நாள் மாலை பார்த்தா சாட்டர்ஜியின் வீட்டு வாசலில் மூடி ஒட்டப்பட்டிருந்த அட்டைப்பெட்டி ஒன்று காணப்பட்டது. அஞ்சல் மூலமாகவோ, கூரியர் மூலமாகவோ வராத அதனை யாரோ நேரில் கொண்டு வந்து வைத்துவிட்டு சென்றிருந்தார்கள். அதில் ஆங்கிலத்தில் முகவரி அழகாக கையில் எழுதப்பட்டிருந்ததும், பெட்டியின் கச்சிதமான வடிவமும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக இருந்தது. அதைத் திறந்து பார்த்தால் பார்த்தா சாட்டர்ஜி நினைத்தது போலவே அதனுள் ஒரு கையெழுத்துப்படி இருந்தது. அதன் முதல் பக்கத்தில் “சார்வாகர் கூறுகிறார்” என்று எழுதப்பட்டிருந்தது. தன்னை சார்வாகர் என்று கூறிக்கொள்பவரின் கூற்றான அந்த பிரதியை பார்த்தா சாட்டர்ஜி தொகுத்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து எழுதிய நூலின் தமிழாக்கம்தான் இது.
இந்திய தேசியத்தின் உருவாக்கத்தை விரிவாக ஆராய்ந்து எளிய மொழியில் அதன் சிக்கல்களை எடுத்துக் கூறும் இந்நூல், இந்தியா என்பது உண்மையில் மக்கள் தொகுதிகளின் கூட்டமைப்பே என்று வரையறுக்கிறது. அரசுருவாக்கத்தின் கோணத்திலிருந்து கட்டமைக்கப்படும் தேசிய பெருமிதங்கள், கதையாடல்கள், அது இந்து ராஷ்டிரமானாலும் சரி, வேறு மதச்சார்பற்ற வடிவங்களானாலும் சரி, மக்களே தேசியத்தினை கட்டமைக்கிறார்கள் என்பதை மறந்துவிடுவதை விமர்சிக்கிறது. அரசுக்கல்ல, அனைத்து மக்களுக்கும் உரியதே தேசம் என்பதை உணர்த்துகிறது.

3 in stock