‘தெருச் சண்டைகளின் ஆண்டுகள்: அறுபதுகளின் சுய வரலாறு’ எனும் இந்நூல் தாரிக் அலி எனும் போராளி, எழுத்தாளர், திரைப்பட இயக்குஞர், பத்திரிக்கையாளரால் எழுதப்பட்ட அருமையான நூல். பாகிஸ்தானில் ஒரு கம்யூனிஸ்ட் குடும்பத்தில் பிறந்து, உயர் கல்விக்காக லண்டன் சென்று பத்திரிக்கையாளராகவும் போராளியாகவும் உருவானவர் தாரிக் அலி, சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக ‘நியூ லெஃப்ட் ரிவ்யூ’ எனும் மார்க்சிய பத்திரிக்கையோடு தொடர்பு கொண்டிருப்பவர் தாரிக் அலி. குறிப்பிட்ட சில ஆண்டுகளில் அப்பத்திரிக்கையின் ஆசிரியராகப் பணி புரிந்தார். இன்று வரை அவரது போராட்ட வாழ்க்கை தொடருகிறது. மார்க்சியம், மத்தியக் கிழக்கு, தெற்கு ஆசிய நாடுகள் ஆகியவை குறித்து அக்கறையோடு எழுதுபவர்.
1968 மாணவர் எழுச்சியின் 50 ஆம் ஆண்டுகளைச் சிறப்பிக்கும் விதமாக அவ்வெழுச்சியின் பல்வேறு பரிமாணங்களை ‘அறுபதுகளின் சுய வரலாறு’ எனும் தலைப்பில் எழுதியுள்ளார். 1980 களும் அதற்குப் பிறகான 50 ஆண்டுகளும் (2018) தாரிக் அலியின் நேரடி வாழ்வோடும் அனுபவங்களோடும் தொடர்பு கொண்டவை. அவை இந்நூலில் மிகச் சிறப்பாகப் பதிவாகியுள்ளன.
பொலிவியாவில் சேகுவாராவின் கடைசி ஆண்டுகள், நவீன இசைக் கலைஞர், பீட்டில்ஸ் இசைக்குழுவின் பாடகர் ஜான் லென்னனுடன் தாரிக் அலியின் தொடர்புகள் முதலானவை இந்நூலில் எடுத்துரைக்கப்படுகின்றன. 50 ஆண்டுகளின் புறட்சிகர இயக்கங்கள் குறித்த அரசியல் ஆவணமாக இந்நூல் விளங்குகிறது.
தெருச்சண்டைகளின் ஆண்டுகள் அறுபதுகளின் சுயவரலாறு / STREET FIGHTING YEARS by Verso, UK (2005)
Publication :
LKR5,427.50
2 in stock
2 in stock