மானுடவிடுதலைக்கான தத்துவமாக 19-ம் நூற்றாண்டில் உருவான மார்க்சியத்தின் இன்றைய நிலை என்ன? குறிப்பாக, 1990-களில் சோவியத் ஒன்றியத்திலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் கம்யூனிஸ்ட்கட்சி ஆட்சிகள் வீழ்ந்த பிறகு, முதலாளித்துவத்துக்கு எதிரான கோட்பாடாக மார்க்சியம் காலாவதியாகிப் போனதா என்ற கேள்வி உலகமெங்கும் எழுந்தது. சோவியத் ஒன்றியம் இருந்த போதே அதனுடன் முரண்பட்டு வேறுபாதை சமைத்த மாவோயிசம், யூரோ கம்யூனிசம் போன்ற மாற்றுகளும் வெற்றி பெறவில்லை என்பதால் இந்தக் கேள்வி மேலும் வலுப்பெற்றது. மறுபுறத்தில் சோசலிச மாற்று முகாம் என ஒன்று இல்லாத நிலையிலேயே முதலாளித்துவம் தன் உள்ளார்ந்த முரண்பாடுகளில் சிக்கித் தவிப்பது மேலும் தெளிவாகியது. மூன்றாம் பாதையென் றெல்லாம் பேசிய ‘சமூக ஜனநாயக’ வகைகளும் முனை மழுங்கி சில இடங்களில் ஃபாசிச சக்திகளுக்கும் சில இடங்களிலும் ‘புதிய இடதுசாரி’ வகைகளுக்கும் இடம் விட்டு காலாவதியாகின. இவை எல்லாம் சரியான மார்க்சிய மாற்றைக் கண்டறிவதை இன்றைய கால கட்டத்தின் அறிவார்ந்த தளத்தின் தலையாய பணியாக மாற்றியுள்ளன. மார்க்சிஸ்டுகள் தரப்பிலும் மார்க்சியத்தின் எதிரிகளிடமிருந்தும் இதற்கான எதிர்வினைகள் நாட்டுக்கு நாடு வேறுபட்டன, அரசியல் களத்திலும் கோட்பாட்டு விவாதங்களிலும் போராட்டங்கள் நடந்தன. தத்துவத் துறையில் பின்நவீனத்துவம் என்ற போக்கைக் குறிப்பாக சொல்லலாம்.
திறந்தநிலை மார்க்சியம் தொகுதி – 2 கோட்பாடும் செயல்பாடும் | Open Marxism | Volume II – THEORY AND PRACTICE
Publication :
LKR3,055.00
2 in stock