இலக்கியத்துக்கும் சமுதாயத்துக்கும் இடையே உள்ள உறவு பற்றிய மிக முக்கியமான தத்துவார்த்த நூல் என்ற வகையில் கைலாசபதியின் ‘தமிழ் நாவல் இலக்கியம்’ தமிழில் வெளிவந்த இலக்கியம் பற்றிய நூல்களில் சிறப்பிடம் பெறுகின்றது.தமிழுக்குள் நாவல் புதிதாகப் புகுந்தது; எழுத்தறிவுப் பரவலையொட்டி வளர்ந்தது; இலக்கியமா இல்லையா என்னும் விவாதத்தில் சிக்கி நிலை பெற்றது. தோன்றி அரை நூற்றாண்டு கடந்தும் தமிழ் உயர்கல்வியுலகம் நாவலை எதிர்கொள்ளத் தடுமாறியது. இத்தகு சூழலில் கலாநிதி க. கைலாசபதி வரலாறும் திறனாய்வும் கலந்த நோக்கில் 1950களில் தமிழ் நாவல்களைக் கண்டு காட்ட முற்பட்டார். தொடர்ந்து அவர் எழுத நேர்ந்த பிற கட்டுரைகளும் சேர்ந்து ‘தமிழ் நாவல் இலக்கியம் – திறனாய்வுக் கட்டுரைகள்’ என இந்நூல் உருப்பெற்றது.
தமிழ் நாவல் இலக்கியம் | Tamil Novel Literature
Publication :
LKR1,885.00
3 in stock
LKR1,885.00
3 in stock