தமிழ்நாட்டில் காலனியக்கால வண்ணஓவியங்களும் அய்ரோப்பியர்களும் உள்ளூர்க் கலைஞர்களும்

Publication :
LKR1,790.00

3 in stock

Author: எஸ்.ஜெயசீல ஸ்டீபன்

தமிழ்நாட்டில் வண்ணஓவியக் கலை வடிவமைப்பு, லிஸ்பனில் இருந்து பெறப்பட்ட ஓவியங்கள், கிறித்தவக் கலை அறிமுகம், மரப்பலகையில் மற்றும் தாளில் வரைந்த ஓவியங்களின் வளர்ச்சி, தேவாலயங்களில் உள்ள சுவர் ஓவியங்கள். துணி மற்றும் கண்ணாடி ஓவியங்கள். ஆயர் மற்றும் பாதிரியார்களின் எண்ணெய் ஓவியங்கள் மற்றும் உருவப்படங்கள் குறித்து ஆராய்கிறது. ஜெர்மனி, டென்மார்க் மற்றும் நார்வேவுக்கு, தரங்கம்பாடி டேனிஷ் குழும அதிகாரிகள், மதப்பரப்புநர்கள் அனுப்பிய தாளில் வரையப்பட்ட படங்கள், உருவப்படங்கள், நீர்வண்ண ஓவியங்கள், மற்றும் கவர்ச்சியான மைக்கா ஓவியங்கள் பங்கும், மேலைநாட்டு ஓவியத்தின் தாக்கமும் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பிரஞ்சுக்காரர்களின் ஓவியப் படத்தொகுப்பு முயற்சிகள். ஓவியங்களின் வளர்ச்சி, பிரான்சுக்கு அனுப்பியது ஆகியனவும் ஆய்வு செய்யப்படுகிறது. ஆங்கிலேயர்களின் சென்னை வருகை, கலைஞர்களின் ஓவிய வளர்ச்சி மற்றும் முன்னேற்றம், காலனியப் பேரரசு விரிவடைந்தது குறித்தும் விரிவாக அலசப்பட்டுள்ளது. ஆற்காடு நவாபும் மற்றும் இரண்டாம் சரபோஜி மன்னர் காட்டிய ஆர்வமும் அதனால் ஏற்பட்ட வண்ணஓவியத் தாக்கமும் இந்நூலில் எழிலுற விளக்கப்படுகிறது.

3 in stock