தமிழ் யாப்பு இலக்கண வரலாற்று நூல் இது. காலந்தோறும் மாறியும் வளர்ந்தும் வந்துள்ள யாப்பு இலக்கணத்தை, இலக்கண நூல்களை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் தெளிவாக எடுத்துச் சொல்கிறது. இலக்கணம் அறிந்த இளந்தலைமுறைக்கும், இலக்கணம் தெளிந்த முதிய தலைமுறைக்கும் ஒருசேர இது பயன்படும். யாப்பருங்கலக்காரிகையே தொல்காப்பியத்திற்குப் பின் யாப்பு இலக்கணத்திற்குக் ‘கையேடு’. காரிகையை மையமாகக் கொண்டு அதற்கு முன்னும் பின்னும் இயற்றப்பட்ட யாப்பிலக்கண நூல்கள் அனைத்தையும் ய. மணிகண்டன் திறமாக மதிப்பிடுகிறார். அதிலும் சான்று இலக்கிய நூல்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஆராய்ந்திருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு. யாப்பிலக்கணத்தை அறியவிரும்பும், ஆராய விரும்பும் எவராலும் இந்நூலைத் தவிர்க்க இயலாது.‘கூப்பிட்டுச் சொன்னால் கும்பிட்டுக் கேட்கும் யாப்புக்கு அதிகாரி ய. மணிகண்டன்’ என்ற ஈரோடு தமிழன்பனின் மதிப்பீடு மிகையல்ல என்பதற்கு இந்நூல் சான்றாகும்.
- You cannot add that amount to the cart — we have 1 in stock and you already have 1 in your cart. View cart
தமிழில் யாப்பிலக்கணம் / Yapilakanam In Tamil
Publication :
LKR2,925.00
3 in stock
LKR2,925.00
3 in stock