கவிஞர் தமிழ் ஒளியின் பல் பரிமாணங்களையும் அறிமுகப்படுத்துவதாக அமைகிறது இக்குறுநூல், அவரது வாழ்க்கையும் ஆக்கங்களும் ஒன்றுக்குள் ஒன்றாய் கலந்து இருப்பதைக் காண முடிகிறது. கவிதைகள், காவியங்கள், சிறுகதைகள். சிறார் ஆக்கங்கள், ஆய்வுகள் என்று பல தளங்களில் தமிழ் ஒளி செயல்பட்டதை இக்குறுநூல் பதிவுசெய்துள்ளது. பாரதி, பாரதிதாசன், தமிழ் ஒளி எனும் முப்பெரும் கவிஞர் மரபை முன்னெடுப்பது குறித்த உரையாடலை முன்வைக்கிறது இக்குறுநூல்.
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையில் முப்பது ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரது மாணவர்கள் பலர் நல்லாசிரியர்களாகவும் ஆய்வாளர்களாகவும் செயல்படு கின்றனர். இவரது ஆய்வுகள் நூல் தொகுதிகளாகவும் குறுநூல் களாவும் வெளிவந்துள்ளன. சங்கரதாஸ் சுவாமிகள், அத்திப் பாக்கம் வெங்கடாசலனார், தோழர் பா. ஜீவானந்தம். ) புதுமைப்பித்தன் ஆகியோர் ஆக்கங்களைப் பதிப்பித்துள்ளார்