நவீன தமிழிலக்கியத்தின் தனித்துவமான படைப்பாளிகளில் ஒருவர் ஜி. நாகராஜன். புதிதாக ஒன்றை எட்டிப் பிடிப்பதற்கான ஆவேசம் இவருடைய படைப்புகளின் அடிப்படையான கூறு. தமிழ்க் கதையுலகின் மையத்தில் இடம்பெறும் பாத்திரங்களை விளிம்புக்குத் தள்ளும் இவர் விளிம்புநிலையிலுள்ள மனிதர்களை இயல்பாக மையத்திற்குக் கொண்டுவருகிறார். பாலியல் தொழிலாளர்கள் முதலான விளிம்புநிலை மனிதர்களை அசலாகவும் உயிரோட்டத்துடனும் பிரதிபலிப்பதில் முன்னோடியாக விளங்குபவர் ஜி. நாகராஜன். ஆகிவந்த மதிப்பீடுகளையும் பார்வைகளையும் இயல்பாக மீறும் இவருடைய எழுத்து கெட்டிதட்டிப்போன நம்பிக்கைகளை இரக்கமில்லாமல் நொறுக்குகிறது. வாசித்து முடித்த பிறகும் மனதுக்குள் கேட்கும் வீணையின் ரீங்காரம்போலப் படித்து முடித்த பிறகும் மனதில் நீண்ட நேரம் அதிர்வுகளை ஏற்படுத்தும் எழுத்து இவருடையது.
ஜி. நாகராஜன் படைப்பாக்கங்கள் | G. Nagarajan Creations
Publication :
LKR4,160.00
4 in stock
4 in stock