சோவியத் புரட்சியின் இருநூற்றாண்டுக் கொண்டாட்டத்தை முன்னெடுக்கும் தேவையுண்டு, தமிழ்ச் சமூகத்தில் அப்புரட்சி உருவாக்கிய தாக்கங்கள் குறிப்பிடத் தக்கது, புரட்சி நடத்துகொண்டிருந்தபோதும், புரட்சி முடித்து சோவியத் உருவாக்கம் நடைபெற்றபோதும், தமிழ்ப் படைப்பாளிகளும் தமிழ் அரசியல் அறிஞர்களும் சோவியத் பற்றி செய்த பதிவுகள் அதிகம். 1950களில் சோவியத்தோடு இந்தியா கொண்டிருந்த உறவு சார்ந்தும், தமிழ்ச் சமூக இயங்குதளத்தில் பல்வேறு தாக்கங்கள் உருவாகின. இவற்றைக் குறித்த சுருக்கமான பதிவாக இக்குறுநூல் அமைகிறது.
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையில் முப்பது ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரது மாணவர்கள் பலர் நல்லாசிரியர்களாகவும் ஆய்வாளர்களாகவும் செயல்படு கின்றனர். இவரது ஆய்வுகள் நூய் தொகுதிகளாகவும் குறுநூல் களாவும் வெளிவந்துள்ளன. சங்கரதாஸ் சுவாமிகள், அத்திப் பாக்கம் வெங்கடாசலனார், தோழர் பா. ஜீவானந்தம், புதுமைப் வீ. அரசு (1954) பித்தன் ஆகியோர் ஆக்கங்களைப் பதிப்பித்துள்ளார்