ஏழு வயதில் ஒரு வாதையாகத் தலைக்கேறியது தான் சினிமாவின் மேலான் எனது வெறி. அதற்கு பைத்தியமாக அவ்வப்போது பலவகையான பேயோட்டும் வேலைகளை முயன்று பார்த்திருக்கிறேன் எதுவுமே பலனலிக்கவில்லை சினிமா இசைக்குப் பின்னாலும் பைத்தியம் பிடித்து அலைந்தேன், ஆரம்ப காலத்தில் ஒரு பாடகனாக மாற முயன்று பார்த்திருக்கிறேன், பாடலாசிரியராக மாறவும், திரைக்கதை ஆசிரியராக மாறவும் சிலகாலம் ஆசைப்பட்டதுண்டு. எதுவுமே நடக்கவில்லை. எந்தவொரு சினிமாவையும் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம் என்ற காலம் வந்த பின்னர்தான் எனது சினிமா வெறி சற்றே அடங்கியது. சினிமாக்கலில் நடிக்கத் தொடங்கிய பின்னர் கடுமையான சினிமா வெறியில் வாழ்ந்து கடந்து போன 40 ஆண்டுகளைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன் அந்த நினைவுக் குறிப்புகள்தாம் இப்புத்தகம்.
LKR2,607.00
4 in stock