துரோகமும் ஆற்றாமையும் வஞ்சினமும் நிராதரவும் தோல்வியும் நிராசையும் பெண்ணாகத் திரண்டு ஆணின் முன் நின்று உரையாடும் வலி மிகுந்த புனைவை உருவாக்குகின்றன றஷ்மியின் கதைகள். பழகிய கதைக்களன்களில் புதிய தோற்றத்துடன் வெளிப்படும் கதைகள் இவை. அவரவர்க்கு அவரவர் இலக்குகளைக் குறித்துக் கொடுத்தது வாழ்வு என்று தத்துவார்த்தமாக எழுதும் ஓவியர் றஷ்மி தன்னுடைய கதைகளில் காமத்தைப் பல்வேறு முகங்களாகத் தீட்டிக் காட்டுகிறார். மெதுவாக நகரும் காட்சிகளில் கலந்து சிறப்பிக்கும் பின்னணி ஒலியைப் போல இக்கதைகளில் உரையாடல்கள் அமைந்திருக்கின்றன. இது றஷ்மியின் முதல் சிறுகதைத் தொகுப்பு.
LKR1,755.00
2 in stock