சமூகவியலும் இலக்கியமும் (Samookaviyalum Ilakkiyamum) / Sociology And Literature

Publication :
LKR1,752.00

3 in stock

Author: K.Kailasapathy

பேராசிரியர் க. கைலாசபதியின் சரளமான தமிழில் அரை நூற்றாண்டுக்குப் பின்னும் புதுமை குன்றாத இலக்கியச் சமூகவியல் நூல் இது.
சமூகவியல் துறையின் தோற்றத்தையும், சமூக மாற்றப் போக்கைக் கருதாத ‘தூய’ சமூகவியலின் போதாமைகளையும் விளக்கி, இலக்கியத்தின் சமூகவியலை இந்நூல் விரிவாக அறிமுகப்படுத்துகிறது.
ஆசிரியரின் தனித்திறமையால் மட்டுமே இலக்கியம் உருவாவது இல்லை; காலம் சார்ந்தும், படைப்பாளியின் வர்க்கச் சார்பு, பயில்வோர் நிலை, விநியோகப் பொருளாதாரம் முதலியவற்றோடும் நெருங்கிய தொடர்புடையது. இவற்றைத் தமிழ் இலக்கியச் சான்றுகளைக் கொண்டு புலப்படுத்துகிறார் கைலாசபதி.
தன்னுணர்ச்சிப் பாடல் என்கிற வகையாகட்டும் இலக்கியத் திறனாய்வு என்கிற பிரிவாகட்டும் அவற்றின் பின்னாலும் சமூகமே செயல்படுவதைக் கைலாசபதி வலியுறுத்துகிறார். இசை என்னும் தூய கலையும்கூட சமூகத்தைச் சார்ந்ததுதான் என்றும் நிறுவுகிறார்.
மொத்தத்தில் சமூகத்தை விட்டு விலகிய இலக்கியம் ஏதுமில்லை. விலகி நிற்பதாகச் சொல்வதற்கும் சமூகமே காரணம்.
இலக்கியத்தைப் பயிலும் அனைவருக்கும் இந்நூல் ஒரு வழிகாட்டியாகும்

3 in stock