அன்பைப் போதித்து வந்த இயேசு படுகொலை செய்யப்பட்டார். அவரது உயிர்ப்புக்குப் பின் அவர் மீது கொண்ட விசுவாசத்தினால் கட்டி எழுப்பப்பட்டதுதான் கிறிஸ்தவம். தூய்மையான ஆன்மிகத்தில் திளைத்து, தோழமையில் வளர்ந்து, அரசியலில் நுழைந்து, சட்டங்களில் அடைபட்டு, அடிப்படையையே நிராகரித்து என பல்வேறு முகம் காட்டி வந்திருக்கிறது, வளர்ந்திருக்கிறது கிறிஸ்தவம்.
அன்பையும் தாழ்மையையும் போதிக்க உருவான மதத்தில் வன்முறையின் வாசனை ஏகமாய்க் கலந்திருக்கிறது. அடக்குமுறையில் அடிபட்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் கூட்டம் ஒரு புறம். திருச்சபைக்குள்ளேயே கலகம் செய்து வன்முறை செய்தவர்களின் கூட்டம் இன்னொரு புறம் என, உள்ளும் புறமும் கிறிஸ்தவம் சந்தித்த தாக்குதல்கள் எக்கச் சக்கம்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் கிறிஸ்தவத்தின் நிலை, வளர்ச்சி மற்றும் மாற்றம் குறித்து இந்த நூல் மிகத் தெளிவாகவும், எளிமையாகவும், சுருக்கமாகவும் அறிமுகம் செய்து வைக்கிறது. இயேசுவின் நேரடிச் சீடர்கள் முதல், இன்றைய சீடர்கள் வரை, அனைத்துத் திருச்சபையினரையும் பற்றி இந்த நூல் வரலாற்று ரீதியில் விரிவாகப் பேசுகிறது.
பாரபட்சமற்ற இந்த நூல் ஆன்மிக நூல் அல்ல; ஒரு மதம் கடந்து வந்த பாதையின் பதிவு.