காலத்தின் மிகச் சுருக்கமான ஒரு வரலாறு | A Briefer History of Time

Publication :
LKR1,950.00

2 in stock

Author: Nagalakshmi Shanmugam

உலக அளவில் விற்பனையில் பெரும் சாதனைகளைப் படைத்த, ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய ‘A Brief History of Time’ நூல், ஓர் அற்புதமான அறிவியல் படைப்பாகும். ஹாக்கிங்கின் வசீகரமான எழுத்து நடையும், காலம் மற்றும் வெளியின் இயல்பு, படைப்பில் கடவுளின் பங்கு, பிரபஞ்சத்தின் வரலாறு மற்றும் எதிர்காலம் போன்ற, அவர் கையாள்கின்ற சுவாரசியமான அறிவியல் விவகாரங்களும் நம் மனங்களைக் கட்டிப் போடுபவையாக இருக்கின்றன. ஆனால் அந்நூல் வெளியிடப்பட்டதிலிருந்து, அதில் இடம்பெற்றிருந்த மிக முக்கியமான கோட்பாடுகளில் சிலவற்றைப் புரிந்து கொள்வது மிகக் கடினமாக இருந்ததாகப் பேராசிரியர் ஹாக்கிங்கிற்கு வாசகர்கள் தொடர்ந்து கடிதங்கள் எழுதி வந்துள்ளனர். அவர்களுடைய கோரிக்கைகளுக்கு இணங்கி, அந்நூலில் கையாளப்பட்ட அனைத்து விஷயங்களையும் எவரொருவரும் எளிதில் புரிந்து கொள்வதற்காகவும், சமீபத்திய அறிவியல் அவதானிப்புகளையும் கண்டுபிடிப்புகளையும் பற்றிய தகவல்களை மக்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவும் ஹாக்கிங் படைத்துள்ள அற்புதமான நூல்தான் ‘A Briefer History of Time என்ற இந்நூல். இது ‘மிகச் சுருக்கமானதாக’ இருந்தாலும்கூட, உண்மையில், முந்தைய நூலின் மிக முக்கியமான அறிவியல் விவகாரங்களை இது அதிக விரிவாக விளக்குகிறது. குழப்பமான எல்லைச் சூழல்கள் குறித்த எண்கணிதம் போன்ற சிக்கலான கோட்பாடுகள் அகற்றப்பட்டுவிட்டன. அவற்றுக்குப் பதிலாக, முந்தைய நூல் நெடுகிலும் இழையோடிய மிகவும் சுவாரசியமான, ஆனால் புரிந்து கொள்ளக் கடினமாக இருந்த சார்புக் கோட்பாடு, வளைவான வெளி, குவாண்டம் கோட்பாடு போன்ற அறிவியல் கோட்பாடுகள் ஒவ்வொன்றுக்கும் இந்நூலில் தனித்தனி அத்தியாயங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

2 in stock