கார்மலி

LKR924.00

8 in stock

Author: மித்ரா அழகுவேல்

பெண்கள் தங்களைப் பற்றியே பேசுகிறார்கள், எழுதுகிறார்கள் என்ற சலிப்பு பொதுவில் உண்டு. என்ன செய்வது? வயிறு நிரம்பினால்தானே கலையும் இலக்கியமும் தத்துவமும். தன்னைப் பற்றி பின்னால் இழுக்கும் விசைகளைக் குறைத்தால்தானே பயணம் சாத்தியம். தன் அன்றாட மனிதர்களும், அவள் மனமும், உடலும், சூழலும் கொஞ்சமேனும் வழிவிட்டால்தானே அவள் சிந்திக்க எத்தனிப்பாள்? பெண்ணின் அன்றாட சிக்கல்களை எடுத்து வைக்கும் கதைகளாக மித்ராவின் கதைகளைப் பார்க்கிறேன். அதிலிருந்தே பெரும் பயணத்திற்கான முதலடியை எடுத்து வைக்க வேண்டியிருப்பதால் அவை முக்கியத்துவம் வாய்ந்தவை. ‘நீ கொஞ்சம் யோசிப்பா’ என்று இந்தக் கதைகள் மூலம் நம்மை நோக்கி மித்ரா கூறுவதாக எடுத்துக் கொள்ளலாம். – எழுத்தாளர் கமலதேவி

8 in stock