கல்வியைத் தேடி: தேசியவாதக் கல்வி – எதிர் – சமுதாய உந்துவிசைக் கல்வி / In Search of Education: Nationalist Education – Versus – Socially Driven Education

Publication :
LKR3,185.00

3 in stock

Author: L. Jawahar Neshan

இந்திய நடுவண் அரசின் புதிய கல்விக்கொள்கை,  மத்திய  அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டு விட்டது.  கடந்த ஆண்டு இது முன்வரைவாக வெளியிடப்பட்டபோதே கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. அப்போது,  ‘இது வெறும் வரைவுதான்; திருத்தங்களை முன்மொழியலாம்’ என்று பசப்பியது இந்திய அரசு.  இலட்சக்கணக்கில் திருத்தங்களைப் பல  அரசியல் கட்சிகள், ஆசிரிய-மாணவ அமைப்புகள் முன்மொழிந்தன. ஆனால்,  எந்தத் திருத்தத்தையும் ஏற்றுக்கொள்ளாமல்,  முறைப்படி நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் கல்விக்கொள்கையை அரசு அறிவித்து விட்டது. பேரா.ஜவகர் நேசன் அவர்கள் தனது செறிந்த பட்டறிவும் படிப்பறிவும் நிறைந்த ஆங்கில நூலை  ‘இன் செர்ச் ஆப் எஜுகேஷன்’ என்ற தலைப்பில் எழுதி மேற்கண்ட வரைவு அறிக்கையை விமர்சித்தார்,  நமது இந்தியன் யுனிவெர்சிடி பிரெஸ் பதிப்பகம் வாயிலாக வெளியிடப்பட்ட இந்த நூல், தமிழகம் எங்கும் பரவலாகக் கவனம் பெற்றது. புதிய கல்விக்கொள்கை என்பது முற்றிலும் பழமைவாதம், மனு தர்ம விதிகள், சாதி-மதப் பாகுபாட்டுக் கண்ணோட்டங்கள் நிரம்பிய இந்துத்துவ தேசியவாதக் கொள்கையே என்பதை ஜவகர்நேசன் அவர்கள் அனைத்துக் கோணங்களிலும் அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்துகிறார்.  In Search of Education – நூல் இப்போது தமிழில் கமலாலயன் மொழிபெயர்ப்பில்  பாரதி புத்தகாலயம் வெளியீடாக வருகிறது.

3 in stock