கலீல் ஜிபிரானின் 100 குட்டி கதைகள் மற்றும் கடிதங்கள் | 100 Short Stories and Letters by Khalil Gibran

LKR1,300.00

4 in stock

Author: V.K. Balakrishnan

கலீல் ஜிப்ரான்

லெபனானிலுள்ள பெஷாராவில் பிறப்பு. பிறந்த ஆண்டு 1883. முழுமையான பெயர் ஜிப்ரான் கலீல் ஜிப்ரான். தந்தையின் பெயர் கலீல் ஜிப்ரான். தாயின் பெயர் கமீலா. பிறந்த நகரத்தில் ஆரம்ப கல்வி. பன்னிரெண்டு வயதில் குடும்பத்துடன் அமெரிக்காவின் பாஸ்டனில் குடியேற்றம் இரண்டரை வருடங்கள் அங்குள்ள பொது பள்ளிக் கூடத்திலும் ஒரு வருடம் இரவு பாடசாலையிலும் கல்வி கற்ற பிறகு, மீண்டும் லெபனானுக்குத் திரும்பி வருகை. மத்ரஸத் – அல்- ஹிக்மத் என்ற கல்லூரியில் கல்வி தொடர்ந்தது. இலக்கியம், தத்துவம், மத வரலாறு – இவைதான் அங்கு கற்றவை. 1902 ஆம் ஆண்டு மீண்டும் அமெரிக்காவிற்கு. 1908 இல் பாரிஸில் கவின் கலைக் கழகத்தில் பிரபல சிற்பி ஆக்ஸ்த்ரோடின் கீழில் பயிற்சி. பாரிஸிலிருந்து மீண்டும் நியூயார்க்கிற்குப் பயணம் ஆரம்பத்தில் எழுத ஆரம்பித்தது அரபு மொழியில்தான். அரபு மொழியிலும் ஆங்கிலத்திலுமாக முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். 1923 ஆம் ஆண்டு ‘தீர்க்கதரிசி வெளியே வந்தது.1931 ஏப்ரல் 10 ஆம் நாள் நியூயார்க்கில் மரணத்தைத் தழுவினார். முக்கிய நூல்கள்: தீர்க்கதரிசி, முறிந்த சிறகுகள், பைத்தியக்காரன், அலைந்து திரிபவன், மணலும் நுரையும், கண்ணீரும், புன்னகையும்.

4 in stock