திருஞானசம்பந்தரின் பாடல்களை யாழில் இசைத்தவர் திருநீலகண்ட யாழ்ப்பாணர். அவருக்கு பொற்றாளம் தந்தவர் சிவன். சுந்தரரின் தாயார் பெயர் இசைஞானியார். இராசராச சோழனின் ஆணைப்படி நம்பியாண்டார் நம்பி கண்டடைந்த தேவார பதிகங்களுக்கு பண் வகுத்தவர் திரு எருக்கத்தம் புலியூர்ப் பாணர் குலப்பெண்.
தேவார காலம் தொடங்கி ஒலித்து வரும் பண்ணிசையை கீர்த்தனப் பாணியில் மெருகூட்டியவர் முத்துத்தாண்டவர். இந்த இசையே கருநாடக சங்கீதம் ஆகியது. கருநாடகம் என்றால் பழமையானது சாத்திரோக்தமானது என்று பொருள்.