இந்தத் தொகுப்பில் காதல் கவிதைகள் அதிகமில்லை. காதல் என்கிற பெயரில் எழுதப்பட்ட கவிதைகளிலும் கூட அது தன்னை உதறுகிற மாயத்தால் வேறொரு வடிவத்தை நோக்கி நகர்ந்து விடுகிறது. ‘மதநீராய்ப் பூத்த வனம்’ என்கிற தலைப்பில் உக்கிரம் இருந்தாலும் கவிதைகளில் அந்தத் தீவிர பாவம் இல்லையென்றே உணர்கிறேன். ஏனென்றால் மதநீர் ஒழுக விரைந்து வரும் களிற்றின் பாவனைகளை அல்ல. அந்தத் தீவிரத்தையும் கடந்து மௌனத்தின் நாவுகளால் நம்மோடு பேச விழையும் வனத்தின் உறைந்த வாசத்தையே இந்தத் தொகுப்பில் காண முடியும்.
– மானசீகன்