இது ஈழத்தின் கதை.அந்த நிலத்துக்காக நெடுங்காலமாக தொடரும் யுத்தத்தின் கதை.ஆனால்,இது யுத்தத்தைச் சொல்லவில்லை.யுத்தத்தின் மனம் பதறச்செய்யும் கொடுமைகள் விவரிக்கவில்லை.மாறாக,யுத்தத்தை ஒரு திரையாக்கி பின்னால் தள்ளி நிறுத்தியிருக்கிறது.போராளிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான போரின்போது ஒரு கிராமமும் அதன் மக்களும் சந்திக்க நேரும் துயன்களையும் வாதைகளையும் விவரிக்கிறது இக்கதை.
ஆகாலத்தில் கொல்லையில் விழுந்துத் தெரிகின்றன குண்டுகள்.எப்போதும் வானில் சுற்றித் திரிகின்றன போர் விமானங்கள்.பள்ளிக்கூடங்களில் ராணுவம் சூழ்ந்திருக்க,பதிகங்கள் ஒலித்திருந்த கோயில்களில் பிசுபிசுக்கிறது ரத்தக்கறை.ஒரு சிறிய கிராமத்தின் எளிய மனிதர்களின் இயல்பு வாழ்க்கையின் மீது இருள் மூட்டம் கவிகிறது.அச்சம் கடும் நச்சுக்காற்றாகி அனைவரையும் பாதரச் செய்கிறது.காலம்காலமாய் தொடரும் யுத்தம் இது,வெற்றி தோல்விகள் தாற்காலிகமானவையே என்ற நம்பிக்கையைத் தருகிற வலுவான தொன்மங்களும் தொல்கதைகளும் அவர்களைச் சூழ்ந்திருக்கின்றன.மண்ணுக்காகப் போராடும் துணிச்சலைத்தருகின்றன. துல்லியமான குணவார்ப்புகளின் வழியாக உருவான வலுவான கதாபாத்திரங்களும் திருத்தமான உரையாடல்களும் இப்புனைவை வாசகனுக்கு நெருக்கமான ஒன்றாக உறுதி செய்ய்துள்ளன.
கடவுளுக்கும் பிசாசுக்கு இடையே உக்கிரமான போர் மூளும் பொது நிலமும்,அந்நிலத்தில் வாழும் புல் பூண்டுகள்,புழு பூச்சிகள் உள்ளிடட ஜீவராசிகளின் கத் இன்னொரு மோசமான யுத்தமாகி விடுகிறது தீவினையை விவரிக்கிற `கடவுள் பிசாசு நிலம்’ எனும் இந்த நூல்,ஈழ இலக்கியத்தின் முக்கியமான வருகையாக அமைந்திருக்கிறது.”