ஒதெல்லோ | Othello

LKR1,300.00

3 in stock

எல்லோரும் தத்தமக்குரிய ஆசனங்களில் அமர்ந்த பிறகு வாத்தியங்கள் முழங்கின. அரசன்தன் மெய்க்காப்பாளருடன் கொலு மண்டபத்திற்குள் நுழைந்தான். எல்லா அங்கத்தினர்களும். கொலுமண்டபத்தைப் பார்வையிட வந்தவர்களும் எழுந்து நின்று அரசனுக்குத் தங்கள் மரியாதையைத் தெரிவித்தனர்.

அரசன் தன் ஆசனத்தின் மீதேறி எல்லோரையும் அமருமாறு சாடை காட்டிவிட்டுத் தானும் அமர்ந்தான். அவன் அருகில் வழக்கம் போல இருமெய்க்காப்பாளர்கள் வந்து நின்றனர்.

அரசன் அன்று கொலுமண்டபத்தில் விவாதிக்க வேண்டியவற்றைப் பற்றிய குறிப்புகளைக் கவனிக்கத் தொடங்கினான். அப்போது “ஐயோ என்னருமை மகளே என் கண்மணி போன்ற அருமை மகளே!” என்ற கூக்குரலோசை சபை நடுவே எழுந்தது.

3 in stock