இயக்கங்கள் தமது கொள்கைகளை வகுக்கும்போதும் சரி, அதை நடைமுறைப்படுத்தும்போதும் சரி எந்த மக்களின் விடுதலைக்காகப் போராடப் புறப்பட்டார்களோ அந்த மக்களைக் கருத்தில் எடுக்கவில்லை. ஆயுதங்களை முன்னிலைப்படுத்தியும் தலைமையை வழிபட்டும் இயக்கத்தை வளர்க்கும் போக்கு தலைதூக்கியதும் போராளிகள் கதாநாயகர்கள் ஆனார்கள். தமது சகபோராளிகளையும் தமது மக்களையும் எதிரியைவிட மோசமாக அடக்கி ஒடுக்க கொன்றுவீச அவர்கள் தயங்கவில்லை. இயக்கங்களைக் கண்டு மக்கள் பயம்கொள்ளும் நிலையை ஏற்படுத்தினார்கள். தாங்கள் இழைக்கும் தவறுகள் எவ்வளவு தூரம் போராட்டத்தைப் பாதிக்கும் என்பதை அவர்கள் உணர மறுத்தார்கள். முடிவு மக்கள் போராட்டத்திலிருந்து அந்நியப்பட்டடர்கள். போராட்டத்தை வெறுத்தார்கள்.
– சி. புஷ்பாராஜா