By ஜி .ஸி .மென்டிஸ் (Gi .Si .Mendis)
“இலங்கைத் தீவின் சரித்திரம் ” எனும் இந்நூலின் ஆசிரியர் புராதன இதிகாச கதைகளையும் ஐயத்துக்கிடமான பல விஷயங்களையும் நீக்கி,திட்டமாக உண்மையெனக் கூறக்கூடிய சம்பவங்களையே தம் நூலுக்கு ஆதாரமாக கொண்டுள்ளார்.மேலும் ,சம்பவங்களையும்,பெயர்களையும்,காலங்களையும்,வரிசையாகக் கூறுவதோடு நில்லாது,இலங்கை வாசிகளின் மனோவிருத்தி,செல்வம்,வாணிபம்,சிற்பம்,இலக்கியம் என்பவற்றை அதிகாலந்தொட்டு தற்காலம் வரையிலும் இந்நூல் விவரிக்க முயன்றுள்ளார்.எனவே,இந்நூல் வசிப்போருக்கு தெவிட்டாதஇன்பம் தரும் விஷயங்களை கூறும் ஓர் அருமையான சரித்திர நூற் களஞ்சியமாகும் என்பது என் துணிவு .