உலகமயம், தாராளமயம் போன்ற போக்குகளால் முதலாளித்துவமும் நுகர்வுப் பண்பாடும் அசுரத்தனம் பெற்றுள்ளன. இதனால் தேசம், இனம், மொழி, பண்பாடு போன்றவற்றின் தனித்தன்மைகளும் அழித்தொழிக்கப்படும் நெருக்கடிகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இதிலிருந்து மீள்வது எப்படி? நமக்கான அடையாளமும் மீட்டுருவாக்க நெறியும் தேவைப்படும் இந்நேரத்தில் இவையிரண்டின் இணைவாக இலக்கிய மானிடவியல் அமைகிறது. இலக்கியத்தை மானிடவியல் நோக்கிலும் மானிடவியலை இலக்கிய நோக்கிலும் ஆராயும் புதிய நெறி இது. இராமாயணம், மகாபாரதம் முதல் சங்க இலக்கியங்கள்வரை இலக்கியத்தை மானிடவியல் நோக்கில் அணுகுவதன் மூலம் நம் இருப்பின் மீது புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சலாம். அதை இந்த நூலில் காணலாம். தமிழில் இது முதல் முயற்சி மட்டுமல்ல; புது முயற்சியும்கூட.
இலக்கிய மானிடவியல் | Literary Anthropology
Publication :
LKR2,340.00
3 in stock
LKR2,340.00
3 in stock